பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வந்துள்ளன. அந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க நிலையில் ஆசிரியரின் நல்வழிப்பா அமைந்துள்ளது. இனிய ஒசையோடு ஆசிரியவிருத்தங்கள், பிள்ளைத் தமிழ் ஆகிய பகுதிகள் பொருட்சுவையோடு அமைந்துள்ளன. பாரதி தாசனின் பிரதிபலிப்பாக மங்கல மங்கை’ என்ற கவிதை அமைந்துள்ளது. முழு நிலையில் நோக்கும்போது 20-ஆம் நூற்றாண்டுச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி நல்உணர்ச்சியைத் தரும் கவிதைத் தொகுப்பாக நாச்சியப்பனின் பாடல்கள் அமைந் துள்ளன. தமிழ் இதனால் மிகுந்த பயன் அடையும் என்று நம்புகிறேன். சிறந்த கவிதைகளைத் தமிழ் இனத்திற்குத் தந்து தமிழ் இனத்தை வளர்க்கப் பாடுபடுகின்றார் கவிஞர் நாச்சியப்பன் அவர்கள். அவரைப் பாராட்டிப் போற்றி மகிழ்கின்றேன். 28-6-1980 ச. வே. சுப்பிரமணியன்