பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாச்சியப்பன் பேதையரின் கயமை, பெண்ணின் வீரம், பெண்ணுரிமைக்குப் போராடும் உறுதி மிக்க பாங்கு, பெண்ணின் அறிவாற்றல், அறவொழுக்கம் போன்ற செய்திகள் பேசப்படுகின்றன. இதில் சூழ்ச்சியில் ஈடுபட்டுச் சூது செய்யும் பெண்ணையும் காண்கிறோம்; சாதி வெறியினால் சான்றாண்மையை அழிக்கத் துடிக்கும் சாகசத்தையும் காண்கிறோம்; சாதிக் கொடுமையை எதிர்த்துச் சால்பை நிலை நாட்டும் சமத்துவ வேட்கையையும் காண்கிறோம். அறம் வெல்லும் மறம் அழியும் என்ற கவிஞரின் நம்பிக்கை ஒளி எல்லாப் பாடல் களிலுமே சுடர் விடுகிறது. முதல் பாடலில் இரு இளைய உள்ளங்கள் அன்புக் காதலில் இணைவதும், இதற்குப் பெற்றோரும் மற்றோரும் ஒத்துப் போவதும், காவல் துறையினர் கட்டியங்கூறி வாழ்த்துப் பாடிக் காதலரைச் சேர்த்து வைப்பதும், முடிவில் வாழைமர மின்றி வளர்க்கும் நெருப்பின்றி மேள முழக்கமின்றி வேத மொழியின்றி நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்காத காதலொன்றே எஞ்சி யிருக்க எழுந்தம் மலர்க்கொடிக்கே (பக். 13) பூமாலை சூட்டி நின்று புகழ் வாழ்வில் அடிவைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் கவிஞர் காதல் மணத்தின் வெற்றியில் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. வாழவைத்தான் எனும் பாடல் காமுகன் கண்ணப்பனின் கயமையை எடுத்துக் காட்டுகிறது. “கண்ணிற் பதிந்தாள் கருத்தில் பதிந்து விட்டாள்" (பக். 14) என்று அவன் ஏங்கு வதும், அந்த இனியவள் வெறுத்தபோது அவளை வலுவில் கையைப் பற்ற முனைவதும், அவளின் மாமன் மகன் வந்து காப்பதுவும், வேறு ஒருவனுக்கு திருமணம் முடிக்கத் திட்ட மிட்டு மணவறையில்- - -