பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாச்சியப்பன் கஜினி மன்னன் வரலாற்று நிகழ்ச்சியொன்றை மூலமாகக் கொண்டு அமைந்த பொன்னும் வெள்ளியும்’ சிறந்த சந்த நயம் அமைந்த எண்சீர் விருத்தத் தொகுதி. கஜினி மன்னனுக்குக் காவியம் படைத்த புலவனின் முடிவைக் கூறும் வகையில், கஜினியின் மனமாற்றத்தை ஆசிரியர் படைத்துள்ள திறம் சுவைமலிந்துள்ளது. சொத்தெல்லாம் பறிபோகப் பார்த்தி ருந்தும் தூய்தான கடவுள்சிலை உடைந்த போதும் குத்துயிராய் மக்கள்வதை யுற்ற போதும் கொடியனையார் கற்பழிக்கப் பட்டபோதும் இத்தேச மக்கள்கொண்ட துயர மெல்லாம் எழுந்தொன்முய்ச் சேர்ந்ததுவே கஜினி நெஞ்சில் இரத்த வெள்ளத்தில் குளித்துக் களித்த மாமன்னன் கஜினியின் மனத்தில் மாற்றம் நிகழ ஒரு பாவலன் பலியான கதை இங்கு இனிய சந்தத்தில் விளக்கப் பட்டுள்ளது. . இராகமாலிகைபோல, பல்வேறு பாடல்களின் சந்தக் கலம்பகமாக அளவில் விரிந்த கொய்யாக் காதல்’ என்னும் வரலாற்றுக் கவிதைக் கதை அமைந்துள்ளது. அடுத்து வரும் இளவரசி முல்லை'யும் அளவில் விரிந்ததேனும் எண்சீர் ஆசிரிய விருத்தக் கோவையாக விளங்குகின்றது. இவ்விரு வரலாற்றுக் கதைகளும் மீண்டும் மீண்டும் படித்துச் சுவைக்கத்தக்க களஞ்சியங்கள். கருத்துச் செறிவும் கற்பனைத் திறனும் இவ்விரு கதைகளிலும் இனிய பின்னலோடு கோலங் கொண்டுள்ளன. இறுதியில் அமைந்த ஈரோட்டுத் தாத்தா தமிழரின் தளைப்பட்ட வாழ்வில் துயர்போக்கிய தன்மானத் தந்தை பெரியார் பற்றிய கதைச்சித்திரம். கவிஞரின் சொல்லழகும் பொருளழகும் இப்பகுதியில் களிநடம் புரிகின்றன.