பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சில வார்த்தைகளைக் குறித்து ரீ ஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிரு.ர். கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண்தொல்லையாக முடிகிறதென்றும், தேசபாஷைகளிலே கற்றுக்கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ரீ சர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னர். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்லுகிருர்: "பாஷைத் தொல்லை பெருந்தொல்லையாகவே இருக்கிறது. ஆளுல் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்டவரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிக பயன் படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாளுக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப்பிழைகளும் நிறையச் செய்த போதிலும் மொத்தத்திலே தமிழைக்காட்டிலும் இங்கிலீவுை நன்முக எழுதுகிரு.ர்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்முகச் சொல்ல வருகிறது." இங்ங்ணம் எ ழு து கி ற பூரீ நீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத்தெரியாதவர்கள், சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை! புதுமை!!! மேலும் இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப்போர்ை என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர் நார்வேக்காரர், ஸ்விஸ்ஜாதியார், இத்தாலி தேசத்தார்.