பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 20 ஆம் தேதி-குழந்தைக்குக் காய்ச்சல். மனைவிக்குக் காதுவலி. எனக்குப் பித்தக் கிறுகிறுப்பு. 21-ஆம் தேதி-தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய கடைசி நாள். நான் காரியஸ்தலத்தி லிருந்து பணம் கொண்டுவந்து வைக்க மறந்துவிட்டேன்’ அவன் அதுபற்றிப் பாடசாலைக்குப் போவதையே நிறுத்தி விட்டான். நான் சுதேசிய விஷயத்தில் ஊக்கத்துடன் பாடுபடுவதன் பொருட்டாக, என்னை எப்போதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் எனது தம்பியிடம் செய்த ஸம்பாஷணையில் 'உம்முடைய அண்ணனது சினேகிதரான இன்னுரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிரு.ர்கள் என்ற மங்கள ஸ்மாச்சாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி வந்து சொன்னன். 22-ஆம் தேதி-மனைவிக்கும் சிறிய தாயாருக்கும் மனஸ்தாபம் வந்துவிட்டது. ஒருவரை யொருவர் மாற்றி என்னிடம் பிழைகூறத் தலைப்பட்டார்கள். என் ஜீவ தர்மமாகிய சுதேசியம்’ தப்பு முயற்சியென்றும், வீணென்றும், அதில் நான் தலையிட்டதிலிருந்து குடும்பத்துக்குப் பற்பல கேடுகளுண்டாகுமென்றும் சிறிய தாயார் ஸன்மார்க்க போதனை செய்தாள். என் மூக்கில் அடிக்கடி ஒருவித ஊறுதல் உண்டாவது போலத் தோன்றிற்று. அது ஒர் பொல்லாத நோயாயிருக்குமோ வென்ற மூடத்தனமான கவலை கொண்டேன். அக் கவலை பிலிருந்து மனதை அடிக்கடி திருப்பியும், மனம் மீட்டும் மீட்டும் அதில் போய் விழுந்தது. 23-ஆம் தேதி-வெற்றிலையில், சுண்ணும்பு அதிகமாகச் சேர்ந்து விட்டபடியால், வாயெல்லாம் புண்ணுய்ப் போய் "ட்டது. வாய்க்குள் ஜலம் விடுவதற்குக் கூடத் தகுதி