பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வதுபோல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லி விட்டு, ஐயர் ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக்கொண்டு, நான் பிராமணன், நான் தண்ணி, குடிப்பதைக்கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது என்று கதை பேசுகிருன். மற்ருெருவன் தாசில்தார் வேை பார்க்கிருன். பஞ்சத்தினல் ஜனங்கள் சோறின்றி மடியும் போது, அந்தத் தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும் பொருட்டுப் பஞ்சமே கிடையாது, சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்' என்று ரிப்போட்டு எழுதி விடுகிருன், ஆறிலொரு கடமைக்குமேல் ராஜாங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம். பஞ்சநாளில் அதுகூடக் கேட்பது பெருங் குற்றம். அங்ங்னம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி, அதற்குமப்பால், உள்ள பஞ்சத்தை இல்லை யென்றெழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாகில்தார் தனக்கு சாஸ்திரியார்' என்று பெயர் வைத்துக் கொண்டு, நா ன் கெளதம ரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்’ என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளு கிருன். இப்படியே, வைசியத் தொழில் சூத்திரத் தொழில் என்ற கெளரவத் தொழில்கள் செய்வோரும், இவற்றிற்குப் புறம்பான புலைத்தொழில்கள் செய்வோருமாகிய பல் போலிப் பார்ப்பார், தங்களுக்கு இயற்கையாகவுள்ள 鶯 மையை மறந்துவிட்டுப் பொய்ப்பெருமையைக் கொண் டாடி வருகிருர்கள். நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போரா! டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொடுது கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும்,