பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது நோக்கம்

3

அவளுடைய கடமையல்லவாம்; அக் குழந்தையை நன்ருக வளர்ப்பதும் அவளுடைய முதற் கடமை என்று அவள் எடுத்துக் காட்டியிருக்கிறாள்.

தனது குழந்தை உலகிலே முன்னணியிலே நின்று புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்படாத தாயோ தக்தையோ சாதாரணமாக இருக்கமாட்டார்கள். குழந்தைக்கு இயல்பாயமைந்துள்ள திறமைகள் மலர்வதில் பெற்றோர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், சூழ்நிலை எவ்வளவு தூரம் அதற்குச் சாதகமாக இருக்கும் என்பதையும், பெற்றோர்களின் வாழ்க்கை முறையும் நடத்தையும் எவ்வளவு தூரம் குழந்தையின் இள உள்ளத்திலே பதிகின்றன என்பதையும் இக்காலத்திலே உளவியல் நூல் தெளிவாக ஆய்ந்து கூறுகின்றது. விஞ்ஞான முறையிலே அநேக ஆயிரம் குழந்தைகளே ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுவது அவசியம். அப்பொழுதுதான் குழந்தைகளே நன்கு வளர்ப்பதிலே பெரியதோர் வெற்றி காண முடியும்; அப்பொழுதுதான் பெற்றோர்கள் தங்கள் கடமையைச் சரியானபடி செய்தவர்கள் ஆவார்கள். அவர்களுடைய பிற்கால வாழ்வு இன்பமும் அமைதியும் திருப்தியும் உடையதாக அமையும்.

இக்காலத்தில் மனத் தத்துவர்கள் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து குழந்தையைப் பற்றியும், மனிதனைப் பற்றியும், மன வளர்ச்சியைப் பற்றியும் பல உண்மைகளே அறிந்திருக்கிருர்கள். குழந்தை உள்ளத்தைப் பற்றிய அறிவு விஞ்ஞான முறையிலே நன்கு வளர்ந்திருக்கின்றது. மனித உள்ளம் மிக ஆச்சரியமானது. அதிலே வெளிப்படையாக இருந்து வாழ்க்கையிலே சாதாரணமாகத் தொழிற்படும் ஒரு பகுதியும் மறைவாக இருக்கும் ஒரு பகுதியும் இருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் வேறு