பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. தந்தை தாய் தந்தது

"யாரப்பா நீ? - நம்ம சின்ன ராமசாமி மகனா?” என்று கேட்கிறாள் பாட்டி.

"ஆமாம், பாட்டி. எப்படிக் கண்டு பிடிச்சாய்? என்ன நீ பார்த்ததே இல்லையே?" என்று பையன் ஆச்சரியத்தோடு கேட்கிறான். அந்த ஊருக்கு அவன் வந்தது இதுதான் முதல் தடவை. அவன் தந்தை அங்கே அடிக்கடி வருவதுண்டு; ஆனால் அவன் வந்ததில்லை.

"இது தெரியாதா? சின்ன ராமசாமியை வார்த்து வைச்சாப்பிடி இருக்கிறதே. அவனை எனக்கு நல்லாத் தெரியுமே. உன்னைப் பார்த்தால் அவனைப் பார்க்கத் தேவையில்லே" என்று கிழவி பதில் சொல்லுகிறாள். பெற்றொரின் சாயலைக் கொண்டு குழந்தைகளே இவவாறு தெரிந்துகொள்ள முடியும். அவர்களுடைய உடல் தோற்றம் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் அமைவதை நாம் சாதாரணமாக அறிந்திருக்கிரறோம்.

தோற்றத்தில் மட்டுமல்ல குண விசேஷங்களிலும், மனத் திறமைகளிலும்கூட இந்த ஒற்றுமை காணப்படுகிறது. "நூலேப்போல சீலை, தாயைப்போல பிள்ளை" என்றும், "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது" என்றும் சாதாரணமாக மக்கள் பேசுகிறார்கள். பெற்றோரின் தன்மை பிள்ளைகளுக்கு அமையும் என்பதைப் பொதுவாக அனைவரும் உணர்ந்திருந்தாலும் அவ்வாறு அமைவதற்குக் காரணம் என்ன, அந்த அமைப்பைப்பற்றி ஏதாவது விதிகளுண்டா, அக்த அமைப்பு மாறுபாடடைய