பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

எனப் பாவித்துச் சிறுவன் அதில் சவாரி செய்யும் பொழுது அக்குச்சி அவனுக்குக் குதிரை போன்றே ஆகிவிடுகிறது. இம்மாதிரி சிறுவருடைய உள்ளத்தில் எழும் எண்ணங்கள் வேறானவை என்பதை நாம் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த எண்ணங்கள் நமது எண்ணங்களுடன் பொருந்தவில்லையே என்பதற்காக அவற்றை அலட்சியம் செய்யலாகாது. குழந்தை எப்பொழுதுமே குச்சியைக் குதிரையாகப் பாவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல; வயசாக ஆகக் குழந்தை அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்காது. நான் இங்கு எடுத்துக் காட்ட விரும்புவதென்னவென்றால் சிறுவனின் மனப் போக்கு வேறாக இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடாது என்பதுதான். சிறுவனின் மனப்போக்கு அவனுடைய வயசின் இயல்புக்குத் தக்கவாறு சுயேச்சையாக வளர்ந்து வந்தால்தான் பெரியவனுகின்ற காலத்தில் பூரணமலர்ச்சி அடையமுடியும்.

சாதாரணமாக மனிதன் சமூகத்தையும் சூழ்நிலையையும் அனுசரித்துத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான். ஓரளவிற்கு அவற்றைத் தன் இஷ்டப்படி மாற்றி அமைக்கவும் முயல்கின்றான். பெரும்பாலோர் சமூகத்தை அனுசரித்தே கடந்து கொள்வார்கள். ஆனால் உறுதியான எண்ணங்களுடைய சிலர் சமூகத்தைத் தமது எண்ணங்களுக்கேற்ப மாற்றி அமைக்க முயலுகிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக இருந்தால், அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்கே காரணமாய் விடுகின்றன. அப்படிப்பட்ட சிந்தனையாளர்களால் உலகம் நன்மையடைகின்றது. சிங்தனை சக்தியை இளம்பிராயம் முதற்கொண்டே தடை செய்யாது மலரும்படி செய்வதாலேயே இது சாத்தியமாகின்றது.

ஆனால் எல்லோரும் சமூகத்தையே மாற்றியமைக்கக் கூடிய சிந்தனையாளர் ஆகிவிட முடியாது. இருந்தாலும்