பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேச்சும் பாட்டும்

27

சிறுவனுக்குத் தன் பேச்சிலேயே நம்பிக்கை குறைந்து பிறகு எதற்கெடுத்தாலும் பிறருடைய திருத்தத்தையே எதிர்பார்க்க ஆரம்பிப்பான். இது கடைசியில் திக்கித் திக்கிப் பேசும் பழக்கமாய் முடியும்.

ராமசாமி என்ற பள்ளிச் சிறுவனுக்கு ஏழு வயதிருக்கும். அவனே 'அச்சமில்லே அச்சமில்லே' என்ற பாரதியார் பாட்டை யார் பாடச் சொல்லிக் கேட்டாலும் உற்சாகத்தோடும் அபிநயங்களோடும் பாடுவான். அவனுடைய அபிநயத்தை அபிவிருத்தி செய்ய விரும்பிய சிலர் அவன் பாடும்போது இடையிடையே தடை செய்து வந்ததால் இப்பொழுது அவன் திக்குவானாய் விட்டான். இரண்டு வார்த்தை சேர்த்துப் பேசவும் சிரமப் படுகிறான்.

வாக்குச் சுதந்திரத்தின் அவசியத்தையும் பயனையும் குழந்தைகளின் கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். குழந்தை சதா கேள்வி கேட்கும். ஒரு குழந்தையின் கேள்விகளைப் பாருங்கள். உதாரணத்துக்காக அவற்றைச் சொல்லுகிறேன்.

ரேடியோவில் பேச்சுக் குரல் கேட்கிறது. குழந்தை கேட்கிறது: "அப்பா, யார் பேசறது?" "ரேடியோ அண்ணா பேசறார்", "எங்கே அவரைக் காணோமே?" "அவர் சென்னையில் இருக்கிறார்.” "இந்தப் பெட்டிக்குள்ளா இருக்கிறார்?" "இல்லை சென்னையிலே-துTரத்திலே இருக்கிறார்.” குழந்தைக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. மறுபடியும் கேட்கிறது. "அங்கிருந்து பேசினா இங்கே எப்படிக் கேட்கும்?"

இப்படிக் கேள்விகள் வளர்ந்து கொண்டே போகும். சில கேள்விகளுக்குப் பதில் சொல்வது வெகு சிரமம். சிலவற்றிற்கு நமக்கே பதில் தெரியாது. அதனால் கேள்வியே கேட்கக் கூடாதென்று குழந்தையை அதட்டி மிரட்டி