பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாடலாய்-பொன்னும் வெள்ளியுமாய்த் தரப்பட் டுள்ளது. விலைமகளின் வன்னெஞ்சத்தால் பல நல்லுயிர்கள், வாழ்விழந்த சோகக் கதையைக் கொய்யாக் காதலும். நம்பிக்கைத் துரோகம் செய்தார் நாள் எல்லை வாழ்ந்த தில்லை என்பதை, இளவரசி முல்லை'யும் விளக்குகின்றன. ஈரோட்டுத் தாத்தாவின் அஞ்சலியாக ஒரு கவிதை அமைந் துள்ளது. சுருங்கச் சொன்னல் திரு. நாச்சியப்பன் கவிதைகளைப் படித்த பின்னர், நல்ல சுவையான விருந்தை அளவாகச் சாப்பிட்டதைப் போன்ற மனநிறைவு ஏற்படுகின்றது. இத்தகைய வாழ்வை வளமாக்கும் கவிதைகளை மேன் மேலும் எழுதவேண்டும் என வாழ்த்துகின்றேன். சு. இராசலட்சுமி இராமச்சந்திரன்