பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 19 எங்கும் சிரிப்பொலியும் இன்பமிகு பேச்சொலியும் பொங்கும் உளமெல்லாம் போற்றுகின்ற வாழ்த்தொலியும் (பக்.23) சூழ, மணமக்கள் வீற்றிருப்பதுவும், அவளை அடைய முடி யாமல் தோல்வியுற்றவன் திருமணத்தைத் தடுக்கக் கருதி தீய நஞ்சு போன்ற செய்தியை அனுப்புவதும், தெய்வமகன் வந்து அவளைத் திருவாகக் காப்பதுவும் மிக அழகாக வருணிக்கப்படுகின்றன. -- கற்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதுஎன்பதை மாற்றிப் பாடினார் பாரதியார்; ஆண், பெண் ஆகிய இரு பாலார்க் கும் கற்பைப் பொதுவில் வைப்போம் என்ற இலக்கணமும் வகுத்தார். அவர் வகுத்த அவ்விலக்கணத்திற்கு இலக்கிய விளக்கமாகத் திகழ்கிறது ‘இனிய பாதி’ என்னும் கவிதைப் பகுதி. பண்பின் பரிசு என்னும் பாடல், சாதி வெறிகொண்ட கயவர்சளுக்குச் சாட்டையடி வழங்குகிறது. இப்பாடலில் பெண்ணழகு மிக அருமையாக வருணிக்கப்படுகிறது. ‘தங்க உடல் நிறமும்; தாமரைப் பூஞ் செம்முகமும் கொண்ட பெண்கள் இவர் கவிதையால் மேலும் அழகு பெறுகின்றனர். 'பெண்கள் செய்த குறும்புச் செயல்களைக் கணக் கெடுத்தால் பெய்த மழையின் பெரிதாகும்’ (பக். 40) என்னும் உவமை மிகவும் ஆழமும், நுட்பமும் வாய்ந்தது. ஒர் உயர்குலப் பெண் ஆற்றில் மூழ்குகிறாள். சேரி இளைஞன் ஒருவன் அவளைச் சின்னமான் கன்றுபோலச் சேர்த்தணைத்துத் தூக்கி வந்தான். சனாதனிகள் செய் நன்றி மறந்து அவன் சாதிச் சிறுமையை எண்ணிப் பழிக் கின்றனர். கையை வெட்ட உத்தரவு பிறக்கிறது; அணங்கு சாதியின் ஆதிக்கத்தை எண்ணிப் புலம்புகின்றாள்,