பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கவியின் இதயம் கவிக்குத்தான் புரியும் என்ற தமிழ் மூதுரைக்கு அத்தாட்சி ஏதாவது வேண்டுமென்ருல் பெரியசாமித் தூரன் அவர்கள் எழுதியுள்ள "பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்' என்ற கட்டுரைத் தொகுதி யைப் படிக்கலாம். பெரியசாமித் தூரன் அவர்கள் உரைநடையில் மட்டுமல்ல, சிறந்த சாகித்யங்களைப் புனைவதிலும் சிறந்தவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர் பாடல்கள் இன்றும் பல வித்வான்களால் பெரிய கச்சேரிகளில் பாடப்பெற்று வருகின்றன. இத்தனைக்கும், தூரன் அவர்கள் எளிய மனமும் அடக்கமும் படைத்தவர். வித்தைச் செருக்கு அவருக்கு அணுவளவும் கிடையாது. தான் எழுதியதுதான் சரி என்ற எண்ணமும் இருந்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிறு சம்பவம் இப்பொழுது எனது நினைவுக்கு வருகிறது. என்னை எப்பொழுது பார்க்கலாம் என்று தூரன் அவர்கள் கேட்டனுப்பினர். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவர் இன்னொருவருடன் என் இல்லம் வந்தார். கூட வந்தவர் ஒரு சங்கீத வித்வான். 'என் பாட்டு களை நீங்கள் கேட்கவேண்டும்' என்று தூரன் அவர்கள் கேட்டார். அந்த வித்வான் பாட தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களைக் கேட்டேன். சொற்செறிவும் கருத்துச் செறிவும் நிறைந்த பாடல்கள் அவை.