பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேசப்பட்டதாகக் காளிதாஸருக்குத் தோன்றுமானல் அவ சபையாரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு எழுதாமலிருக! லாம்.) குமாரசாமி வாத்தியார் : மேலே விசாரணைகள செய்வோம். குண்டு ராயர் : பெல்ஜியம் தேசத்திலே எமீல் வுெ ஹேரன் (Emile Veriaeren) என்று ஒரு கவி இருக்கிருக அவருடைய கவிதை புது வழியாக இருக்கிறதென்று ஒரு பத்திரிகையில் வாசித்தேன். எப்படி யென்ருல், இது வ.ை உலகத்துக் கவிகள் நமது நவீன நகரங்களிலேயுள்ள யந்திர ஆலைகள், மோட்டார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைத் தமது கவிதையிலே சேர்ப்பதில்லை. இந்த வஸ்துக்களில்ே அழகில்லையாதலால் கவிதையிலே சேர்க்கத் தகாதன என்ற நினைத்துக் கொண்டிருந்தார்கள். வானம், காற்று, நீர் வனம், மலை, பெண், செல்வம், மது, தெய்வம், தவம் குழந்தை முதலிய அழகுடைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம், எமீல் வெர்ஹேரன் என்பவருடைய் கொள்கை யாதென்ருல்-'வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளியுருவத்தைப் பார்த்து அது அழகப் இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. யந்திரக் களிலே வலிமை நிகழ்கின்றன. ஆதலால் அவை அழகு.ை யன. அவற்றைக் கவி புகழ்ச்சி செய்தல் தகும்'. காளிதாஸன் : வலிமை ஒர் அழகு. அழகு ஒரு வலிமை. யந்திர ஆலே, நீராவிவண்டி, நீராவிக் கப்பல் வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான் உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வச் காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்துதான் இருக்கிருர்கள். இதிலே புதுமையொன்றுமில்லை. வலிமை; கருவிகள் இப்போது சில புதுமையாகத் தோன்றியிரு.