பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 5. 1 (j சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே! அலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் கானுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடி! -கிளியே! பேசிப் பயனென்னடி! யந்திர சாலை யென்பர் எங்கள் துணிகளென்பர் மந்திரத் தாலே யெங்கும் -கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ? உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவாரடி-கிளியே! செய்வ தறியாரடி! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினுற் சொல்வ தல்லால்!-கிளியே! நம்புத லற்ருரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைக்!-கிளியே! பேணி யிருந்தாரடி! தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே! அஞ்சிக் கிடந்தாரடி