பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 நான் பின்வாங்கியதில்லை. அவரும் கீர்த்தனை ஒவ்வொன்றும் சிறப்பாகப் பட்டை தீட்டப்பெற்றுப் பிரகாசிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமுடையவராக இருந்ததால் என் ஆவலைப் புரிந்துகொண்டு ஒத்துழைத்தார் என்பதை இந்தச் சமயத்தில் நன்றி உணர்வுடன் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன். - சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்தராவ் அவர்கள் சங்கீத கலாநிதி முசிரி சுப்பிரமணிய ஐயருடைய பிரதம சீடராவார்கள். முசிரி வழியைப் பின்பற்றிப் பாடக் கூடியவர்களில் இவரைப்போல் இன்று யாரும் இல்லை என்றே கூறலாம். இவருடைய இசைப்புலமையை மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு அவரைப் பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்ற குறையும் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அதை இங்கு வெளிப்படையாகவே கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். திரு. டி. கே. கோவிந்தராவ் அவர்களுக்கு இசை வகுப் பதில் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். ஒரு கீர்த்தனை-என்னென்ன உணர்ச்சிகளை வெளியிட உருவாகி இருக்கின்றதோ அவற்றையெல்லாம் நன்கு உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு இசைவகுப்ப தில் அவர் தனிச்சிறப்புடன் விளங்குகிருர். இவருக்குப் பல மொழிகள் தெரிவதால் அவற்றிலெல்லாம் இசைவகுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிரு.ர். இந்தத் திறமையை வானொலி முதலிய நிறுவனங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - மேலே கூறிய இரண்டு சங்கீத வித்வான்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனுவேன். - இந்நூலுக்கு அன்புடன் முகவுரை எழுதி உதவிய சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், உயர்திரு. செம்மங்குடி