பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 59

நாம் பஞ்சமரை ஆதரித்து அவர்களுக்கு கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அனுசரிக்கும்படி செய்து அவர்களையும் நமக்கு சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களா?” என்று பாரதி கேட்கிறான்!

பாரதியின் இந்த வினாவுக்குரிய விடையை சுதந்திர அரசு தந்தது. ஆனால், இந்து சமூகம் தரவில்லை. இந்து சமூகம் பஞ்சமர்களை அணைப்பதன் மூலமே வளரும்; வாழும்!

பாரதி, சாதிகளை வெறுப்பவன். ஒன்றுபட்ட பாரத சமுதாயம் பாரதியின் இலம்சியம். இந்தக் கொள்கையினை “ஆவணி அவிட்டம்” என்ற கட்டுரையில் விளக்குகிறான்! நெஞ்சினைத் திறந்து வீரப்ப முதலியார் மூலம் பேசுகிறான். “பூணூலை எடுத்துப் போடுங்கள்! இந்தியா முழுவதும் ஒரே ஜாதி! ஒரே ஆசாரம்” என்று செய்துவிடி வேண்டும் என்கிறான்.

பிராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை என்று இருக்கும்வரை இந்த இழிவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு! பூணூல் என்ன? கீணூல் என்ன? வீண் கதை” என்று பேசுகிறான்!

இன்றைய பாரதம் - தமிழ்நாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பாரதியின் தடத்திலா? இல்லை, இல்லை! எங்குப் பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்! எனதருமை நாடே! என்று விழித்தெழுவாய்?

மேலும் பாரதி எழுதுவதைக் கேளுங்கள்!” எல்லோரையும் சமமாக்கு ஐரோப்பியர்களைப் போல,