பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நம்மையும் படிக்கத் தூண்டுகிறார். ‘குமாஸ்தா வின் பெண்’ணில் இராகவன் மூலம் ‘உலகத்தைவிட உன்னதமான புத்தகம் இருக்கிறதா?’ என்று நம்மைக் கேட்கிறார்.

அண்ணா அவர்கள் சமூகத்தின் மனப் போக்குகளை ஓரளவு தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார். “சமூகத்தினர் கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதில்லை; அலைகளையே எண்ணி அலமருகின்றனர்; நெஞ்சினோடு நெஞ்சு உற்று நோக்கும் உணர்வின்றி முலாம் பூசிய முகத்தோடு மோதுகின்றனர்.

மனித சமூகத்தை ஏமாற்றி விடுவதென்பது கெட்டிக்காரத்தனமான காரியமல்ல. ஏனெனில் அவர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உயர்வுக்குப் பயன்படாத உதட்டில்,உலாவும் இரக்க உணர்ச்சிகளே உள்ளன.

கண்டும் கேட்டும் போடும் பிச்சைகளில் மகிழும் மக்கள் மனப்போக்கு மாறாத வரையில் சமூகத்தில் நிலையான வளமான பொருளாதாரப் புரட்சியைத் தோற்றுவிக்க முடியுமா?” என்று பார்வதி பி.ஏ. யின் மூலம், நம்மைக் கேட்கிறார்.

“ஆடம்பரத்திலும் வெளி வேஷத்திலும் இவ்வளவு சுலபத்திலே ஏமாந்து போகும் இந்த மக்களைக் கொண்டு எப்படி சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்?” என்று பார்வதி ஏக்கம் கொண்டாள்.

சமூகத்தில் பல வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொழில் இல்லை. அவர்களுடைய