பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

என்ற சங்ககாலப் பாடலும்,

“........................ மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

(புறம் - 192)

என்ற பாடலும் சங்ககாலத்தில் மறுமலர்ச்சிக்கு துணையாய் அமைந்த பாடல்கள்! முடியரசுகள் செல்வாக்காக இருந்த நூற்றாண்டில், அரசனது ஆணை தெய்வீக ஆணை என்றிருந்த காலத்தில் அப்பரடிகள் அரசனின் ஆணையை எதிர்த்து முழங்கினார்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!

நரகத்தில் இடர்ப்படோம் நடிலை யல்லோம்

ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்

இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!


தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச் சேவடிஇணையே
குறுகி னோமே!”
(ஆறாம் திருமுறை 901)

என்ற பாடல், முடியாட்சியை எதிர்த்து குடியாட்சிக்கு வரவேற்புக் கூறிய பாடல் அன்றோ? திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும்!

இந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு தமது படைப்புக்கள் மூலம் உயிரளித்து வருபவர்களில்