பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இந்தக் கூற்றுக்களின்படி புராணங்களின் மீது நேரிடையாக அண்ணாவுக்கு வெறுப்பில்லை யென்பதையும், அவை காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சிக்குத் துணை செய்யாமல், சமூக அநீதிகளுக்கு அரண் செய்து இருப்பதால், அவற்றை எதிர்க்க வேண்டிய அவசியத்தில் அண்ணா இருக்க வேண்டியதிருக்கிறது என்று உணர முடிகிறது. இதை, “புராண மதங்கள்” என்ற புத்தகத்தை ஆழப் படித்தால் தெளிவாக உணர முடியும்.

இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து சமய சமூகத்தில் மண்டிக் கிடக்கும் ஜாதீய மனப் போக்குகளுக்கு அறிஞர் அண்ணா ஒரு சவுக்கு, ஒரு வெடிகுண்டு. அவர் உண்மையிலேயே ஜாதிக் கொடுமைகளை எண்ணும்பொழுது கொதிப்படைகிறார்; குமுறுகிறார் என்பதை அவருடைய கதாபாத்திரங்கள் மூலம் உணர முடிகிறது.

ஜாதியில் கீழ் ஜாதியாகவும், பணத்தில் ஏழையாகவும் மனிதன் இருந்துவிட்டால், அவனுடைய சிறு தவறுகளுக்கும் கூட ஏச்சும் கண்டனமும் கிடைக்கின்றன. ஏன்? முடிந்தால் தண்டனைகளும் கூடக்கிடைக்கின்றன.

ஆனால் ஜாதியால் உயர்ந்தவனோ, பணத்தால் உயர்ந்தவனோ பழிபாவங்களும் படுகொலையும் செய்தாலும் கூட சமூகம் மூடி மறைக்கிறது; பாராட்டியும் பேசுகிறது. ஏழைகள் பால் - கீழ் ஜாதியினர் பால் இரக்கம் என்று ஒன்றுகூட காட்ட மாட்டார்களென்று ஜாதிக் கொடுமைக்கு ஆளான உத்தமியை பார்வதி தேற்றுமிடம் நினைந்து நிலைந்து உருகத் தக்கதாக அமைந்திருக்கிறது.

உயர் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதியை முற்றிலும் ஒதுக்கினாலும் பரவாயில்லை. தேவைப்படும்பொழுது