பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 66

“ஏழைகள் வருந்தினால் தனக்கென்ன என்று நினைப்பவர் மூடர். பலர் அசெளகரியப்படும் வகையில் சிலர் செளகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்திய மில்லை” என்று பாரதி தெளிவுபடுத்துகிறான்!

ஏழை - பணக்காரர்களுக்கிடையில் பரஸ்பரம் அருவருப்பும் அவமரியாதையும் வளர்ந்து பகை முற்றி வருகிறது. இதன் விளைவே காவல் முறை வளர்தல், பூட்டுக்களின் பெருக்கம்! சட்டங்கள் இயற்றப்படுதல், சிறைச் சாலைகள் அமைத்தல் முதலியன. இவையெல்லாம் துன்பத்தை மிகுதிப்படுத்துமே தவிர, தீர்வு சொல்லாது; தீர்வு செய்யாது.

ஆங்கிலக் கவிஞன் பைரன், மனிதர்களை “நாய்களே!” என்று அழைத்தான். பிறகு பைரன், தான் செய்த தவற்றை திருத்திக் கொள்கிறான். அதாவது, மனிதர்களை நோக்க நாய்கள் பரவாயில்லை. ஆதலால் மீண்டும் “மனிதர்களே!” என்று கூறுகிறான்.

மனித குலத்தை பற்றியுள்ள துன்பங்களுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதுதான் அன்பு! அன்பே தீர்ப்பு! சகோதர உணர்ச்சியே தீர்ப்பு! ஆனால் சகோதர உணர்ச்சியைப்பற்றி எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்; முழங்குகிறார்கள்! பயன் என்ன?

அன்பு செய்தல் நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அன்பு செய்தல் ஒழுகலாறாக அமைதல் வேண்டும். இன்பம் வேண்டுமா? அன்பு வேண்டும். அன்பில்லாவிடில் இன்பமில்லை.

அன்பை மறந்துவிட்டு, துறந்து விட்டு சொத்து பணம், பதவி, அகந்தை, மரியாதை - இவைகளில் ஆசைப்பட்டு மூழ்கி அல்லற்பட்டு ஆற்றாது அழும்