பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இது இருதும் கருத்துக்களையும் ஒன்றாக்கி எழுதிச் செயல்படுத்தித் தமிழ்ச் சமயததையும், சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும்.

மாணிக்கவாசகப் பெருமான் எடுத்துக் கூறியதைப் போல “முன்னைப் பழைமைக்கும் பழைமையதாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்” என்ற நிலையில் நமது சமயத்தினை விளங்கச் செய்ய வேண்டும்.

அறிஞர் அண்ணா “துன்பம், சுடச்சுட நோற்கிற் பவர்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்கத் துன்பத்தில் வளர்ந்தவர்; நெறியில் நீங்கியோரின் ஏச்சில் வளர்ந்தவர்; பெருநெறி விலகிய பேதையர் பேச்சைக் கடந்து வந்தவர்.

பொது வாழ்க்கையை அறிஞர் அண்ணா மலராலாய மஞ்சம் எனக் கருதவில்லை. அது துன்பம் நிறைந்தது; இடையூறுகள் நிறைந்தது என்று எடுத்துக்காட்டிப் பொது வாழ்க்கையின் வெற்றிக்குரிய சக்தியைப் பெறத் தூண்டுகிறார்; ஓடாது நிற்கச் சொல்லுகிறார்; எதிர்த்துச் செல்ல தூண்டுகிறார்; போராடி வெற்றி பெற வற்புறுத்துகிறார்.

தேனிக்களைப் போல பிறருக்கென சுற்றித் திரிந்து உழைக்கச் சொல்லுகிறார். பொது வாழ்க்கைக்குத் தன்னலம் - தன்னலச் சபலம் கேடு என்று சொல்லுகிறார். சபலத்தைக் கடந்து, சஞ்சலத்தைக் கடந்து, பொது வாழ்க்கையில் ஈடுபட கற்றுத் தருகிறார்.

அறிஞர் அண்ணா சிறந்த இலக்கியப் படைப்பாளர். மிகச் சிறந்த மனிதப் பண்புகனை இலக்கியத்தில்