பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 101

தேவையை அறிந்த அறிவுடைய பெருமக்கள் மறுக்கமாட்டார்கள்.

ஏன்? உண்மையான அருளாளர்களும் மறுக்க மாட்டார்கள். உறுதியான சிந்தனை, உலகத்தில் நடை முறைக்கு வந்தே தீரும்; மாறுதலை ஏற்படுத்தியே தீரும். இது மக்கள் மன்றத்தின் சென்ற காலத் தீர்ப்பு. இந்த வரலாற்றுத் திருப்பம் நம்முடைய தமிழகத் திருமடங்களில் - தமிழர் திருமடங்களில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மக்களை நாடி வரத் தொடங்கிவிட்டனர்; பேரவை கண்டுள்ளனர்; மக்கள் நலங்கருதிப் பேரறங்களைச் செய்ய முன்வந்துள்ளனர். இது தமிழகச் சமய வரலாற்றில் புதிய அத்தியாயம்.

இந்த அத்தியாயத்தை இடையீடின்றி இன்பமே சூழ, எல்லோரும் வாழும் வகையில் எழுதி முடிக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழக அரசு இருப்பது சமய சீர்த்திருத்த உலகத்துக்குப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என விளங்குகிறது.

ஆறமலை அடிகள் அவர்களும் தமிழ்த் தந்தை திரு வி. க. அவர்களும் இன்ன பிற சான்றோரும் பக்தி நெறியை, கண் மூடிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முயன்று சூழலைச் சீராக்கியுள்ளதால் பகுத்தறிவு இதுக்கத்தினரும் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்வுக்கு ஆவாத வறண்ட பழைமையைத் தாக்கி வலுவிழக்கச் செய்துள்ளனர்.

இக்க இருமுனைத் தாக்குதலால் வறண்ட பழைமை, கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.