பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காளமேகம் விருத்தம் இராகம்:- ஷண்முகப்பிரியா உனைப்பற்றிய கவி நீயே உனக்குப்பின் ஊரிலுள்ளோர் நினைப்பதற்குள்ள அடையாளங்கேள் இந்த நீணிலத்தில் இனிப்புற்ற தேன் அமுதம் தமிழ் சோலை யெழில் நிலவுர் தனிப்பட்ட உன்னிதழ் போலவே சிவந்திடும் தாமரையே. இளவரசன் இராகம்:- சங்கராபரணம் தாளம்:- ஆதி சுகித்தி. வாராயோ சொல்லாய்த் தமிழ் வல்லி சகம்நீ இன்பம்நீ கர்வமும் நீயடி அகலாத உயிர்க் கானந்த தேகி மாவீரமே வா கவிதா வனிதையே இசை பெருகிடு மொழியே வா எனுயிரின் ஒளியே உயர்வே உனையலால் கதியிலை அழகே மாதமிழர் ஆககமே மானிடர் அறிவாம் உலகத்தின் ஆதிக்கமே நீ. விருத்தம் இராகம்:- சங்கராபரணம் சீருள்ளவெண்குடை நற்றிருமலை ராஜசிங்க யேறே பேருள்ள உன் குடி நற்பிரதானியர் உற்ற பெரிய சேனை ஊருள்ள மாமக்கள் மற்றுநீ உனது மனைமக்கள் யாரும் பாருள்ள காலமும் பன்னலமும் உற்றின்ப முற்று வாழி.