பக்கம்:சாவின் முத்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சாவின் முத்தம்



மலரினில் முகத்தைச் சாத்தி
மகிழுவர்! அலைகள் கெய்து,
புலர்ந்திடும் பார்வைக் கூட்டம்
போக்குவர்! சேந்திக் கொள்வர்!
அலர்ந்தவாய் அனுப்பிக் கேள்வி
ஆடுவர்! விடைத ராதாள்
உலருவாள்! “ஊமைப் பெண்ணே!"
ஓடடி என்பாள் மீனா!

கூம்பிய களினப் பூவைக்
கிண்டுவர்! அன்னக் குஞ்சு
தாம்புக்கால் அரவிங் தத்தின்
சதிர்விளை யாட்டு என்று
சாம்பிட இமைகள் தைக்கும்!
சேற்றினில் தவளை கத்தும்!
பாம்புவாய்க் கருநீ லத்தின்
பரப்புதான் குளத்தின் போர்வை!

முகந்துநீர் கொப்ப வரிக்க
முந்துவாள் ஒருத்தி!"பூவிே
சுகந்தானா?" என்று கன்னம்
தட்டுவாள் அடுத்தாள்; எங்தன்
அகத்தினைத் திருடும் கள்ளன்
யார்எனக் கேட்டால், "மொட்டே
எகத்தாளம் செய்கின்றாயா!
என்னடி அம்மா!" என்பாள்.

'வரிப்புறம் இரண்டு' என்று
வளர்த்துவாள் கதையை வஞ்சி,