பக்கம்:சாவின் முத்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சாவின் முத்தம்

அதிரும் உலகில் நெறிதேய்ந்த மக்களின்
ஆணை போல் வைர மின்னல் ஆடிற்று!
வடுவை நிறுத்தும் மரகதக் கொப்பில்
குங்குமம் இழுக்கும் கொழுந்துகள்; இடியால்
கொதும்பின! ஊதலால், கூட்டுப் பறவைகள்
அதுங்கின/ காதல் எச்சரிக் கும் இதழ்,
பதுங்கிற்று வஞ்சியின் பவளக் கரைகளில்

சிக்காறக் கிடந்த நீண்ட உலகம்
ஒடுங்கி ரணத்தில் உறங்கிற்று!
மணிக்கூரை வேய்ந்த வீடும், மாட்டமும்,
அணிலின் முதுகு போல் ஆயின அன்று!

பொன் தாழ் அருவிப் புனல் அசை கின்ற
பாதையில் ஓர்குடில்! ஊதையால் நடுங்கும்
பிரேதச் சாவடி! பிள்ளை வண்டின்
சித்திரக் கூடு தேன் கலந்த உடனே
பொத்தல் காட்டுதல் போல, அந்தக்
குடிசையின் அங்கம் காணப்பட்டது.

ஒழுக்கு. அறிந்து பழுதுகள் துவட்டி,
குழந்தைக் குவியலைக் கோலி, சூடு
அமைத்துத் தானும், கொடிக்கும் இமைகளைக்
குவித்து முடிந்து தூக்கம் பெய்தாள்!

மூச்சு விடாமல் வழியுங் குளிரில்
சில்லரிச் சிலம்பு புலம்புதல் போல,
காசுகே ளாதே கத்தும் தவளையின்
ஆட்சி நீண்டது! அந்நேரத்தில்
கூரையின் மூக்கில் குளிர்ந்த முத்தை
வார்த்து நேரம் வளர்த்தது அந்தரம்!