பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பொருத்தமாகக் கவி பாடுகிறார் காளமேகம். பொது மக்கள் பாராட்டு, அதிமதுரம் ஆச்சரியம். எனினும், அவனது பொறா மைத் தி கொழுந்துவிட் டு எரிகிறது. உரியினின்றும் காள மேகம் இறக்கப்படுகிறார். தெரியும் இந்த ஜாலவித்தையெல்லாம்; மரியாதை யாக உம் ஊர் போய்ச் சேரும்' என்று விரட்டுகிறான் அதிமதுரம். அதை அரசனும் ஆமோதிக்கிறான். பொது மக்கள் ஆத்திரம், முத்துப்புலவர் மனம் பற்றி எரிகிறது. காளமேகம் மனம் புண்படுகிறது; திருமலைராயன் நகர் மண்மாரி பெய்யப் பrடுகிறார். வானம் குமுறுகிறது; கட்டடங்கள் அதிர்கின்றன: மரங்கள் சாய்கின்றன; அரசன் நடுக்கம்; அதிமதுரம் ஒடுகிறான்......... அதிமதுரத்தின் கதி என்ன? திருமலைராயன் நகர் எவ்வாறாகிறது? காளமேகம் என்ன செய்கிறார்? திடுக் கிடச் செய்யும் மற்ற சம்பவங்களைத் திரையில் காணுங்கள, சுபம்! சுபம்!! சுபம்!!!