பக்கம்:சொன்னார்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


நான் சிறு குழந்தையாக இருந்தபோதுகூட எனக்கு அதைக்கொடு, எனக்காக இதைச் செய் என்று யாரிடமும் கேட்டது கிடையாது.

—பிரதமர் இந்திரா காந்தி


கை தட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. கை தட்டுகிறவர்கள் தங்கள் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

—நேரு (12 - 5 - 1963)


இந்தியாவில் இமயம்முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாகரிகம்தான் இருக்கிறதென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தியாவின் நாகரிகம் பலவகைப்படும் எனச் சரித்திரங்கள் கூறுகின்றன. சரித்திரங்களில் நாம் படிக்கத்தகாத விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் ஒதுக்கிவிட வேண்டும். அத்தகைய சரித்திரங்கள் எல்லாம் அந்நியர்களால் எழுதப்பட்டவை.

—சுபாஷ் சந்திர போஸ் (20 - 5 - 1928)

(பம்பாயில்)

நாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.

—கென்னடி (13 - 3 - 1962)


நான் தினமும் காடுகளுக்குள் சென்று, அங்கிருந்து புதுப் புதுத் தாவரங்களை ஆராய்கிறேன். அதன் மூலம், இயற்கை அன்னை நமக்கு ஆவலுடன் கற்பிக்க விரும்பும் அரிய பாடங்களைக் கற்கிறேன். தினசரி காலையில், நான் காட்டில் தனியாக இருக்கும்போது, நான் .அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுனிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.

—ஜியார்ஜ் வாஷிங்டன் கார்வர்

(நீக்ரோ விஞ்ஞானி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/66&oldid=1014690" இலிருந்து மீள்விக்கப்பட்டது