பக்கம்:சொன்னார்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103


எனக்குப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. பதவி வகிப்பது எனக்குப் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நான் தொடர்ந்து பதவியில் இருப்பதின்மூலம் நாட்டுக்குச் சிறிது சேவை செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

—நேரு (12 - 6 - 1963)


சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள்.

—இந்திரா காந்தி (8- 2 - 1969)


இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடிக்க வேண்டிய படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நான் கல்கத்தாவுக்குச் சென்று மடத்தில் சேரப் போகிறேன்.

—நடிகை சரோஜாதேவி (8 - 3 -1962)


வைத்தியன் கட்டளைப்படி ஜீவிக்கும் வியாதியஸ்தன் எந்த நிலைமையிலிருப்பானோ அதே நிலையில் நாமுமிருக்கிரறோம். பூலோகத்தில் சுதந்திரத்தை விசேஷமாய் விரும்பும் தேசங்களில் ஒன்றின் ஆதீனத்தின் கீழ் பரீக்ஷை நிலையிலிருந்து வருகிறோம். இதுவரைக்கும் பரீக்ஷை செய்தது போதும். எங்கள் மூக்காங்கயிற்றை எடுத்து விடலாம். குழந்தைப் பருவத்தைத் தாண்டி, நாங்கள் பூரணவயதையடைந்து விட்டதால் எங்களுக்குச் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு பாகத்தையாவது நாங்களே நடத்திக் கொள்ளும்படி விடவேண்டும் என்று நாம் இப்பொழுது கேட்கிறோம்.

—சுரேந்திர நாத் பானர்ஜி

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/105&oldid=1077868" இலிருந்து மீள்விக்கப்பட்டது