பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பையனும் பச்சைக்கிளியும்


பையன்
பச்சைக் கிளியே, என்னிடம்

பறந்தே ஓடி வா,வா.
அச்சம் ஏனோ கொள்கிறாய்?
அருகில் ஓடி வா, வா.

பச்சைக் கிளி
வேண்டாம், அங்கே வந்திட

விருப்ப மில்லை போ, போ.
கூண்டில் போடப் பார்க்கிறாய்.
கொடிய பையா! போ, போ.

பையன்
இல்லை, இல்லை. நானுமே

நல்ல பையன். வா, வா.
தொல்லை ஏதும் தந்திடேன்.
சொல்லை நம்பி வா, வா.

பச்சைக் கிளி
வேலை யற்ற பையனே,

வேண்டாம், உடனே போ,போ.
சோலை நோக்கி நானுமே
செல்ல வேண்டும் போ,போ.

25