பக்கம்:பாரதித் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்.வாழ்க்கை வரலாறு

41


இதற்கும் அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படவே இதையும் புதுச்சேரியிலிருந்து நடத்த முடிவு செய்தனர். விஜயாவும் கர்மயோகியும் 1909 செப்டெம்பர் 7-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி முதல் வெளிவந்தன. பாரதியாரைை ஆசிரியராகக்கொண்டு சூர்யோதயம் என்ற பத்திரிகையும் வெளிவரலாயிற்று. இவையெல்லாம் 1910-ஆம்ஆண்டிற்குள்ளேயே மறைந்து போயின.

பத்திரிகைத் தொண்டு முடிவடைந்தது. பாரதியாரின் வறுமையும் துன்பமும் மட்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தன. தமது பொழுதையும், மனத்தையும் கவரக்கூடிய பத்திரிகைகளும் நின்று விடவே அவர் வாழ்க்கை வெறிச்சென்று போயிருக்க வேண்டும்.

பாரதியார் புதுவைக்குத் தனியாகவே சென்றார். மனைவி திருமதி செல்லம்மா பாரதி சென்னையிலே யிருந்தார். பிறகு அவருடைய தமையனர் வந்து கடயத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்.

பின்னல் திருமதி செல்லம்மா பாரதியும் புதுச்சேரி வந்து சேர்ந்தார். குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகொண்டது.

பாரதியார் எத்தனையோ துன்பங்களை அநுபவித்தார். அவருடைய நிலையினைச் சித்தக்கடல் என்ற சிறு பகுதியினில் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட வாசகத்திலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

“மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனையுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்! பராசக்தி, எனது கருவி கரணங்களிலே நீ பரி பூர்ணமாக ஸந்நிதிகொண்டு என்னையும் அங்ஙனமே காக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/41&oldid=1539957" இலிருந்து மீள்விக்கப்பட்டது