பக்கம்:பாரதித் தமிழ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

85


அதே இதழில் விஜயா, இந்தியா பத்திரிகைகளை அச்சிடும் ஸ்ரீ ஸரஸ்வதி அச்சியந்திரசாலையின் விலாச மாறுதல் தரப்பட்டுள்ளது. இனிமேல் அச்சகம் புதுவை வழுதாவூர் வீதி 10 நெ. வீடு என்ற இடத்தில் இருக்குமென்றும், பத்திரிகைகளின் அலுவலகங்களும் அங்குதானிருக்குமென்றும் அதில் தெரிகின்றன.

பின்னால் சூரியோதயம் என்ற பத்திரிகைக்குப் பாரதியார் ஆசிரியராகிறார்.

1909 நவம்பர் 20-ஆம் தேதி இதழிலிருந்து அதாவது புதுச்சேரியிலிருந்து வெளியாகும் இந்தியாவின் இரண்டாம் தொகுதி 5-ஆம் இதழிலிருந்து மறுபடியும் அது தினசரிப் பத்திரிகை அளவிலும் அதிகப் பக்கங்களுடனும் படங்களுடனும் வெளிவரத் தொடங்குகிறது. இவ்வாறு பத்திரிகை பெரிதாகியும் சந்தா மாறவில்லை. சந்தாவை உயர்த்துவது நியாயமென்றும், பத்திராதிபர் தமது தேச பக்தியால் அவ்வாறு செய்யாதிருப்பினும் இந்தியா அபிமானிகள் சந்தாவைக் கூட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் சிலர் கடிதமெழுதுகிறார்கள். சந்தாவை உயர்த்துவதோடு பத்திரிகையை வாரம் இருமுறை வெளியிட வேண்டுமென்று சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். குறைந்தது 1500 பேர் இதற்குச் சம்மதம் தெரிவித்தால் வாரம் இருமுறையாக்கத்தாம் உடன் படுவதாகப் பாரதியார் எழுதுகிறார்.

அவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டதோ என்னவோ, இந்தியா அடுத்த யுகாதியிலிருந்து வாரம் இருமுறையாக வெளியாகுமென்று 1910 ஜனவரி 24-ஆம் தேதி இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா வாரம் இருமுறைப் பத்திரிகையாக வரவேயில்லை. இந்திய சர்க்கார் பிறப்பித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/85&oldid=1539811" இலிருந்து மீள்விக்கப்பட்டது