பக்கம்:பாரதித் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பாரதி தமிழ்

மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே
மயலையிற்றென்றெவர் வகுப்பரங் கவட்கே.

இங்ஙனம் எட்டயபுரம்
ஸி. சுப்பிரமணிய பாரதி.

வங்கமே வாழிய என்ற பாடலே முதல் முதலாகச் சுதேசமித்திரனில் வெளிவந்த பாரதியார் பாடல் என்று கொள்வது மட்டும் பொருத்த்மாகத் தோன்றுகிறது.

அக்காலத்திலே வங்காளத்தில் பொங்கி எழுந்த தேசீய உணர்ச்சி எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்திருக்கிறது. மாணவர்களுடைய உள்ளத்தையும் அது கவர்ந்தது வியப்பில்லை. தேசீய உணர்ச்சி மிக்க மாணவர் கூட்டத்திலே வங்காளத்தை வாழ்த்திப் பாரதியார் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.சுதந்திரப் போரில் முன்னணியில் நின்று பாரத நாட்டின் விடுதலைக்கு அடிகோலுவதோடு இந்நாடு மறுபடியும் பழம் பெருமையை அடையக் கொண்டு செல்லும் தோணியைப் போல வங்காளம் திகழ்கின்றதென அவர் பாராட்டிப் பாடுகின்றா.வங்காளப் பிரிவினை சம்பந்தமான சட்டம் 1905 செப்டம்பர் 29-ல் ஏற்பட்டது: 1905 அக்டோபர் 16-ல் பிரிவினை செய்யப்பட்டது. ஆதலால் செப்டம்பர் 15-க்கு முன்பே அது பற்றிய பேச்சும் எதிர்ப்புக் கிளர்ச்சியும் தோன்றியிருக்க வேண்டும்.

குறிப்பு:-தலைப்புடன் கொடுக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவ சகாப்தத்தை ஒட்டிய தேதியும் அதற்குச் சரியான தமிழ்த் தேதியும் ஒரு கவிதை, கட்டுரை அல்லது கதை முதல் முதலில் சுதேசமித்திரனில் வெளியான காலத்தை குறிக்கும். வேறு பத்திரிகை அல்லது நூலில் வெளியாகியிருந்தால் அது அங்கேயே குறிக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/91&oldid=1539892" இலிருந்து மீள்விக்கப்பட்டது