பக்கம்:பாரதித் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்க்கை வரலாறு 43

தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப் புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால்-உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்வதில் பயனில்லை. அவளும் உனது சரணையே நம்பி, என் னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிருள். இயன்றவரை உண்மை யோடுதானிருக்கிருள். அவளேயும் நீ ஸ்ம்ரக்ஷணை செய்யவேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை’ பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற் படுத்திக் கொடுக்கவேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ் வுலகத்தில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்யவேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே, ஸம்மதந்தான?

மஹா சக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஒயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே! து! தூ! கோழை.

புகையிலை வழக்கம் தொலைந்துவிட்டது, பரா சக்தியின் அருளால். இனிக் கஸ்ரத் வழக்கம் ஏற் படவேனும், பராசக்தியின் அருளால். தோள் விம்மி வயிரம் போலாக வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/43&oldid=605858" இலிருந்து மீள்விக்கப்பட்டது