பக்கம்:பாரதித் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பாரதி தமிழ்


பத்திரிகைச் சட்டம் பாரதியாரின் முயற்சிகளையெல்லாம் ஒரேயடியில் வீழ்த்திவிட்டது. இந்தச் சட்டத் கைப்பற்றி 1910 பிப்ரவரி 12-ஆம் தேதி இந்தியா இதழில் விவரமும், தலையங்கமும் வெளியாகியிருக்கின்றன. 1910 மார்ச் 5-ஆம் தேதி இதழில் சிற்பமும் கவிதையும் என்ற பொருள் பற்றித் தலையங்கம் காணப்படுகிறது. அத்தலையங்கம், “இதைக்குறித்து எழுதினுல் பத்திரிகைச் சட்டம் நம்மை அண்டாது. ஆகையால் இதையாவது நம் ஜனங்களுக்குச் சொல்வோம்” என்று ஆரம்பத்தில் கூறுகிறது. இதிலிருந்து அந்தச் சட்டத்தின் பிடிப்பு எவ்வளவு வலிமையாக இருந்திருக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் அடுத்த இதழையும் நான் பார்த்தேன். அதற்கு மேலே எத்தனை இதழ்கள் வந்தனவோ தெரியாது. அதிகம் வந்திருக்க முடியாது.

வாரம் இரு முறையாக இந்தியாவை வெளியிடத் திட்டமிட்ட பாரதியார் அதை ஒரு முறையாகக்கூட வெளியிட முடியாது போயிற்று. பத்திரிகைச் சட்டத்தின்படி அவர் நடத்தும் பத்திரிகைகளை பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்து விட்டனர். அதனல் பாரதியாரின் பத்திரிகைப் பெருமுயற்சி ஒடுங்கியது.

அவருடைய பத்திரிகைகளை அடக்க முயன்றதோடு அவரையே கைது செய்யப் பல சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. 1910 பிப்ரவரி 26-ஆம் தேதி இந்தியா இதழில் எப்படி நம்புவது’ என்ற தலைப் புடன் ஒருசிறு கட்டுரை வெளியாகியுள்ளது. அதிலே ஒரு சீ. ஐடீ. பாரதியாரை ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுக்கச் செய்த தந்திரம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சென்னையிலேயிருந்த காலத்தில் ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/86&oldid=1539852" இலிருந்து மீள்விக்கப்பட்டது