பக்கம்:பாரதித் தமிழ்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் 235

எல்லா தேசத்தாரும் ஸ்கோதரரென்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றேயென்றும், ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரை யொருவர் அவ மதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழைகளென்றும் பூரீ டாகுர் சொல்லுகிரு.ர்.

அமெரிக்காவில் ஒரு சபையிலே இவர் மேற்படி கொள்கையை எடுத்துக்காட்டுகையில், அந்த தேசத் தானொருவன் இவரை நோக்கி, இவ்விதமான கொள்கையிலிருந்தது பற்றியே உங்கள் தேசத்தை அன்னியர் வென்று கைப்பற்றிக் கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்” என்றான்.

“நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக ..விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ய பூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வசாப மிருக்கிறது” என்று ரவீந்திரநாத டாகுர் அவருக்கு மறுமொழி சொன்னராம். அதாவது, இந்த நிமிஷத் தில் செல்வத்திலும், பெருமையிலும் நம்மைக் காட்டி லும் அமெரிக்கா தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும், இந்த நிலைமை எப்போதும் மாரும லிருக்குமென்று அமெரிக்கர் நினைப்பது பிழை. நாங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பி யிருக்கிருேம். கீழே விழுந்தாலும் மறுபடி எழுந்து விடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோகதி. ஆதலால், இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனு சரித்து உலக முழுவதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும், சமானமென்றும் தெரிந்து கொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தினல் பிழைக் கலாமென்று ரவீந்திரர் அவர்களுக்குத் தர்மோப தேசம் செய்கிரு.ர்.

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில், நமது நாட்டில் குற்றங்கள் நடப்ப தைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா ? இங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/234&oldid=605548" இலிருந்து மீள்விக்கப்பட்டது