பக்கம்:பாரதித் தமிழ்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 பாரதி தமிழ்

-- --------اس----------------- نام م

அமெரிக்கப் பத்திரிகாசிரியரொருவர் எ ழு தி ய மேற்கும் கிழக்கும் விரோதம்” என்ற வ்யாஸத்தை ப்ரசுரம் செய்திருப்பதுடன், அதைக் குறித்து ஒரு தலையங்கக் குறிப்பும் வரைந்திருக்கிறது.

அந்த வ்யாஸ்த்தின் கருத்து யாதெனில் எதிர் காலத்தில் ஸ்மீபத்திலே (ஏற்கெனவே நடந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தைக் காட்டிலும் பன் மடங்கு கொடிய) பூகோள மஹா யுத்தமொன்று நடக்கப் போகிறதென்பது. இந்த யுத்தம் வெள்ளை ஜாதியாருக்கும் இதர வர்ணத்தாருக்குமிடையே. நடக்குமாம். ஜப்பானியரையும் சீனரையும் அமெ ரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தம்முள்ளே பிர வேசிக்கக் கூடாதென்று தடுப்பதை உத்தேசித்து ம ஞ் ச ள் வர்ணத்தாருக்கும் வெள்ளையருக்கும் சண்டை வருமாம். ஜப்பானில் பூமி கொஞ்சம்; ஜனத்தொகை அதிகம். அதற்கு அதி சமீபத்தில் அமெரிகா இருக்கிறது. அங்கு விஸ்தாரமான பூமிக ளிருக்கின்றன. ஜனத்தொகை மிக சொற்பம். இன்னும் உழவின் கீழே கொணராத மிக வளமார்ந்த மைதானங்கள் ஆயிரக் கணக்கான மைல்களில் பரவிக் கிடக்கின்றன. கனடாவிலுள்ள நிலங்களே நன்றாக முழுமையும் பண்படுத்தினல் அதில் விளையக் கூடிய கோதுமை மனிதக் கூட்டத்தில் பாதிக்குப் போதிய உணவாகுமென்று கணக்கிடப் பட்டிருக் கிறது.

உலகத்திலுள்ள பூமியையெல்லாம் இங்ஙனம் ஐரோப்பியர் சூழ்ந்து கொண்டு, நிலத்துக்குத் தவிக்கும்; ஜனங்களைத் தம் சூழல்களுக்குள் ப்ர வேசிக்கக் கூட்ாதென்று தடுப்பதை ஜப்பான் ஆrே பிக்கிறது. வலியவன் பேச்சுஇறுதியில் வெல்லுமென்ற ஐரோப்பியக் கொள்கையை சாதகமாக எண்ணி ஜப்பான் தன் சண்டைக் கப்பல்களை அதிகப்படுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/451&oldid=605892" இலிருந்து மீள்விக்கப்பட்டது