பக்கம்:பாரதித் தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பாரதி தமிழ்

கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகளெழுது வோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்றுகூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடை யாகப் பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எ ப் .ே பா து ம் துடித்துக்கொண் டிருப்பவன் புலவகைமாட்டான். கவிதை யெழுது பவன் கவியன்று: கவிதையே வாழ்க்கையாக உடையோன், வா ழ் க் ைக யே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனே ஒன்றாகி வாழ்பவனே கவி.

& 豪 *

பானிய பாஷையில் பதினேழசை கொண்ட “ஹொக்கு என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நிற்கும். முப்பத்தோரசையுள்ள உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. உயோநே நோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டந்தங் கள் காட்டியிருக்கிரு.ர். அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) GrciruGgm tř se ? ரர்ணி யிருக்கிரு.ர். வேண்டாதவற்றைத் தள்ளி விடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிரு.ர். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து-விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே ப த ங் க ள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக் கவிராணி இங்கிலீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/219&oldid=605524" இலிருந்து மீள்விக்கப்பட்டது