பக்கம்:பாரதித் தமிழ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி தமிழ்

192



“மஹான்கள் கவிகளாயினும், சாஸ்திரக்காரராயினும், வேறு எவ்வகையிலே தேசத்துக்கு உபகாரம் செய்திருந்தபோதிலும், அவருடைய ஜன்ம தினத்தைக் கொண்டாடி சபைகள் நடத்தி, ஆராய்ச்சிகள் செய்வது தேசத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும்.”

கவி என்ற கட்டுரையிலே திருவள்ளுவர், இளங்கோ என்பவர்களைப்பற்றி அவர்கள் பிறந்தஊர், அவர்கள் ஜன்ம தினத்தைக் கண்டறிய வழி ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனல் கம்பரைப்பற்றி இவ்விதக் குறிப்புக் காணப்பெறவில்லை. அது சில கவியரசர் என்ற கட்டுரையிலே திருவள்ளுவரைப் பற்றிய குறிப்புக்குப் பின் கீழ்க்கண்டவாறு ஒரு பத்தியாக உள்ளது.

“கம்பநாடர் மாயவரத்துக்கு ஸ்மீபத்திலுள்ள திருவெழுந்துாரில் பிறந்தவர். அந்த ஊரிலே அவருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்த வேண்டுமென்று சில வருஷங்களின் முன்பு ஒருவர் முயற்சி செய்தார். ஊக்க மில்லாமையால் அம்முயற்சி நிறைவேறவில்லை. கம்பனுடைய ஜன்ம திதி நிச்சயமாகத் தெரியவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/191&oldid=1539858" இலிருந்து மீள்விக்கப்பட்டது