பக்கம்:பாரதித் தமிழ்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாரதி தமிழ்

கூடித் தொழில் செய் இங்கிலீஷ், ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்ற பாஷை களில் ஏதேனும் ஒன்று படித்து யாதொரு உத்தி யோகமுமில்லாமல் சும்மா இருக்கும் பிள்ளைகளுக்கு நான் ஒரு யோசனை கண்டு பிடித்துக் கொடுக்கிறேன். இஷ்டமானல் அனுசரிக்கலாம். அனுசரித்தால் லாப முண்டு.

கூடி வினே செய்வோர் கோடி வினை செய்வார்

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, கிராமந்தோறும் யாத்திரை செய்யுங்கள். ஊரூராகப் போய்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதே கைங்கரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வண்டிச் செலவுக்குப் பணமில்லையாளுல் நடந்து போகவேண் டும். மற்றபடி ஆஹார வ்யவஹாரங்களுக்கு நமது பூர்வ மதாசார்யார்களும், தம்பிரான்மாரும், ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் செய்த படியே செய்யுங்கள். எங்கே போனலும் உயர்ந்த மதிப்பும், உபசாரங்களும் ஏற்படும். கூட்டத்துக்கு விருந்து காட்டிலேகூடக் கிடைக்கும். அங்கங்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குடிசைப் பள்ளிக் கூடங்களும் போட்டுத் திறமையுடையோரை வாத்தி யாராக நியமித்துக்கொண்டு போகலாம். யாத்திரை யின்பம், தேசத்தாரின் ஸத்காரம், வித்யாதான புண் யம், சரித்திரத்தில் அழியாத கீர்த்தி இத்தனையும் மேற்படி கூட்டத்தாருக்குண்டு. படிப்பு எல்லா மதங்களுக்கும் பொது. எல்லா தேசங்களுக்கும் பொது, எல்லா ஜாதிகளுக்கும் பொது. திருஷ் டாந்தமாக, ஐரோப்பியர் அதிகப் பயிற்சி செய்திருக் கும் ரஸாயனம் முதலிய சாஸ்த்ரங்கள் நமக்கு மிகவும் அவஸரம். எவ்விதமான பயிற்சிக்கும் தேச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/263&oldid=605593" இலிருந்து மீள்விக்கப்பட்டது