பக்கம்:பாரதித் தமிழ்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 பாரதி தமிழ்

கொண்டு விட்டீர்கள். உங்களுடைய ரா ஜ் ய முறையை மாற்றி விடுங்கள். ஐர்லாந்து தேசத்தார் தங்களுக்கிஷ்டமான ராஜாங்க முறைமையை ஏற் படுத்திக்கொள்ளும் உரிமையுடையோ ரென்பதை அங்கீகாரம் செய்து கொள்ளுங்கள். உடனே ஐர் லாந்து உங்களிடம் நட்புள்ள தேசமாய்விடும். உங்க ளுடன் ஸமாதானத்தோடும் அன்போடும் வாழத் தொடங்கும் என்று மிஸ்டர் ஆர்தர் க்ரிபித்ஸ் சொல்லுகிறார். ஸின்பீன்” ககதியின் தலைவர் களுடைய கருத்து இங்ஙனமிருக்கிறது. எனினும், இந்த முறைப்படி ஐர்லாந்தைத் தனக்குப் பகை யென்ற நிலேமையினின்றும் பெயர்த்துத் துணையாகச் செய்து கொள்ளுதற்குரிய தீர்க்காலோசனை ப்ரிடிஷ் மந்திரிகளுக்கு இப்போதேற்படுமோ எ ன் ப து எனக்கு மிகவும் ஸ்ந்தேஹமாகத்தான் இருக்கிறது.

(2) கிரேக்க தேசத்தின் ஸ்திதி

கிரேக்க தேசத்து ஜனங்கள் ஸ்மீபத்தில் நடந்த ‘எலெக்ஷன்'களில் வாக்குக் கொடுத்திருக்கும் மாதிரிய்ைப் பார்க்கையிலே அவர்கள் முன்னிருந்த கான்ஸ்டன்டைன் ராஜாவே திரும்பிப் பட்டத் துக்கு வரவேண்டுமென்று விரும்புகிறார்களென்பது நிச்சயமாகத் தெரிகிறது. இந்தக் கான்ஸ்டன் டைன் ராஜா கெய்ஸர் சக்ரவர்த்தியின் ஸ்ஹோ தரிக்குக் கணவரென்பதையும், யுத்த காலத்தில் கெய்ஸருக்கனுகூலமாக இருந்தா ரென்பதையும் கருதி, முன்னர் அவரை ராஜ பதவியினின்றும் தள்ளியவர்களாகிய இங்கிலாந்து முதலிய நேசக் ககதியார் அவர் மீளவும் கிரேக்க தேசத்து ராஜா வாகக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறார்கள். கான்ஸ்டன்டைனுக்கப்பால் நேசக் ககதியாரின் கைப்பொம்மையாகிய வெனிஜிலாஸ் என்ற கிரேக்க மந்திரியின் உதவியுடனே, கிரேக்க ஆட்சியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/361&oldid=605751" இலிருந்து மீள்விக்கப்பட்டது