பக்கம்:பாரதித் தமிழ்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விநோதங்கள் 401

கொண்ட ஜனஸமூஹம் பிழையானது. அதைஎப்படி அழித்துவிட்லாமென்பதைக் குறித்து நாம் யோசனை ச்ெய்ய வேண்டும். த்ொழிலாளிகளுக்கு அதிகக் கூலி கொடுக்க வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அவர்களுடைய தொழிலின் முழுப் பயனையும் அவர்கள் அனுபவிக்க வேண்டு மென் கிறேன்” என்றார். முதலாளிகள் முதல் போட்ட அளவுக்கு அவர்களும் பயன் பெற வேண்டு மென் பதைக் கர்னல் வெட்ஜ்வுட் மறுத்துப் பேசுவதாக நினைப்பது நியாயமன்று. ஆஞ்ல், தொழிலாளரின் தொழிலால் பெருமளவில் முழுப் பயனும் தொழி லாளிகளையே சேர வேண்டுமென்பதுதான் அவ ருடைய கொள்கை. மேலும் முதலாளிகள், தொழி லாளிகள் என்ற பேதமின்றித் தொழில் செய்வோரே நாட்டிலுள்ள தொழிற் களங்களுக்கெல்லாம் அதி பதிகளுமாய் விட வேண்டுமென்ற கொள்கை அவர் மனதிலிருக்கக் கூடும்.

இயன்ற வரை. நகரத்து ஜனங்கள் அனைவருமே ஏதேனுமொரு வகையில் பொது நலத்துக்காகத் தொழில் செய்து தீரவேண்டு மென்பதும், அங்ஙனம் நாட்டு மக்கள் அனைவரும் தொழில் செய்யுமிடத்தே தொழிற்சாலை யுரிமையும் பொதுவாகிவிட வேண்டு மென்பதும் ந i ன ஐரோப்பியத் தொழிற் கrதியாரின் கொள்கையாதலால், அதையெண்ணியே கர்னல் வெட்ஜ்வுட் மேலே காட்டிய வசனங்களைக் கூறியிருக்கிறார் ஆனல் கீழ்த்திசையிலும் தொழி லாளிகளின் நிலைமை அதேமாதிரியாகத்தானிருக்கும் போது மேற்றிசை நாகரிகத்தை மட்டும் கர்னல் வெட்ஜ்வுட் குறிப்பிட்டுப் பழி பேசியதன் நோக்கம் யாதென்று நம்மவரிலே சிலர் திகைப்பெய்தக்கூடும். ஆனால், மேலெழுந்தவாருகப் பார்க்கும் போது, இவ்விஷயத்தில் மேற்றிசையும் கீழ்த் திசையும்

பா. த.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/400&oldid=605813" இலிருந்து மீள்விக்கப்பட்டது