பக்கம்:பாரதித் தமிழ்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹா மகம் 477

தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத் தால், சிலர் பூஜையால் ஞானமெய்த முயலு கிறார்கள். ஆனல் எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாம் ஞானத்தைத் தரும். ஆனல் எந்த வழியாலே தரும்? பாவத்தைத் தீர்த்து விடுதலாகிய வழியிலே தரும். அவற்றால் பாவம் நீங்கும். அதனல் மோக்ஷம் அல்லது அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானமுண்டாகும். ஞான மாவது எல்லாம் கடவுள் மயமென்ற அனுபவம். பாவமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல். இங்ஙனமே, புண்யமாவது தனக் கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்த மான இன்பம் விளைவித்ததற்குரிய செய்கையென்பது சாஸ்த்ர கோடிகளின் பரம ஸித்தாந்தம். எல்லாம் ஆத்மா-எல்லாம் கடவுள் ஆதலால், எல்லாம் தான் என்ற ஞானத்தால் பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம் நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். நியாயம் புண்யம்; அநியாயம் பாவம். ஹிதம் புண்யம்: அஹிதம் பாவம். ஸத்யம் புண்யம்; அஸத்யம் பாவம். திருப்தி புண்யம்; துக்கம் பாவம்.

மரணமாவது பாவத்தின் கூலியென்று கிறிஸ்தவ வேதம் சொல்லுகிறது.

“இங்ஙனம் பாவத்தைத் துறந்துவிட விரும்பு வோனுக்கு மனே நிச்சயமும், ஞான உதயமும் கதி யாயின், பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்ப கோணத்துக்கும், காசிக்கும், ராமேசுவரத்திற்கும் ஏன் போகவேண்டும்?’ என்று சிலர் வினவக்கூடும்.

மன மாறுதல்கள் சாசுவதமான இடத்தே விரதங்கள் என்று கூறப்படும். பெரிய சாசுவதமான ஸங்கல்பங்கள் விரதங்களெனப்படும். இந்த விர தங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/476&oldid=605930" இலிருந்து மீள்விக்கப்பட்டது