பக்கம்:பாரதித் தமிழ்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால விளக்கு

சக்திதாஸன் 4 பிப்ரவரி 1921 ரெளத்திரி தை 23 ‘நாகரிகத்தின் ஊற்று” ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரி ஸ்தானத்தி லிருந்தவராகிய ரீமான் க்ளெமான்ஸோ சில தினங் களாக இந்தியாவில் ஸஞ்சாரம் பண்ணி வரும் செய்தி நம் நேயர்களுக்குத் தெரிந்ததேயாம். இவருக்குச் சில நாட்கள்ன்'முன்னே பம்பாயில் நடந்த விருந்தின்போது இவர் செய்த ப்ரலங்கத் ல் பின்வரும் ஸார மயமான வாக்யம் காணப் படுகிறது:

“ப்ரான்ஸிற்காக இரத்தம் சிந்திய மக்களைப் பெற்ற தேசத்தை வந்து பார்த்தது எனக்குப் பெருமையுண்டாக்குகிறது. ப்ரெஞ்ச் குடும்பங் களுடன் இந்திய சிப்பாய்களிருந்தபோது நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மரியாதையும் அன்பும் ப்ரான்ஸ் தேசத்தாரை மோஹிக்கும்படி செய்தன. கீழ்த்திசையானது நாகரிகத்தில் குறைந்த தன்று. அன்பு மானுஷகம் என்பவற்றிற் குரிய மஹோந்நதலகங்யங்களெல்லாம்கீழ்த்திசையிலிருந்து வந்தன. மேற்குத் திசையார் அவற்றை ஸ்வீகரித்துத் தம்முடைய லக்ஷயங்களாகச் செய்து கொண்டனர். எனவே, உங்களைக் காட்டிலும் உயர்ந்த நாகரிகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/427&oldid=605854" இலிருந்து மீள்விக்கப்பட்டது