பக்கம்:குதிரைச் சவாரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணிக்கூண்டுக் கடிகாரம், ‘டாண் டாண்’ என்று ஏழு தடவைகள் அடித்தது. உடனே முனுசாமி, “சரி, இனிமேல் நாளைக்குத்தான்; நாளை நான்கு மணிக்கு வந்தால் குதிரைச் சவாரி செய்யலாம்” என்று, அங்குக் காத்துக் கொண்டிருந்தவர்களிடம் கூறிவிட்டு, குதிரைகள் இரண்டையும் ஒட்டிக்கொண்டு புறப்பட்டான்.

மோஹனுடைய மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு தடவையாவது குதிரைச் சவாரி செய்துவிட வேண்டும், ஆனல், குதிரைக்காரர் சும்மாவா ஏற்றிக்கொள்வார்: இருபது காசுக்கு எங்கே போகிறது?’ என்று ஏதேதோ நினைத்துக்கொண்டே வீடு சென்றான்.

அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே இல்லை. குதிரைகளைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் மாலை-சரியாக மணி நான்கு - மோஹன் முதல் நாள் குதிரைகள் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கே முதல் நாளைப் போலவே அநேகர் கூட்டமாக நின்றனர். எல்லோரும் முனுசாமி வரும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மோஹனும் அந்தப் பக்கமே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“அதோ, குதிரைகள் வந்துவிட்டன!” என்று முதல் முதலில் மோஹன்தான் கூறினான். உடனே எல்லாக் குழந்தைகளும், “ஆமாம், ஆமாம், அதோ வருகின்றன” என்று சந்தோஷத்துடன் குதித்தார்கள்.

முனுசாமி குதிரைகளைக் கொண்டுவந்து அந்த இடத் தில் நிறுத்தினன். அன்றும், முதல் நாளைப் போலவே பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தைகளை ஏற்றிவிட்டான்.

இப்படியே வழக்கமாக நடந்து வந்தது. மோஹனும் நாள் தவறாமல் அங்கே வந்துகொண்டிருந்தான். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/9&oldid=496017" இலிருந்து மீள்விக்கப்பட்டது