பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை


குழந்தைகள் கொண்டாடும் நேருஜியின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளைத் தமது பாடல்கள் மூலமாக இப்புத்தகத்தில் படம் பிடித்துக்காட்டுகிருர் குழந்தைக் கவிஞர் திரு. வள்ளியப்பா அவர்கள். இப்பாடல்களில் பெரும்பாலானவை ‘கல்கி', 'கண்ணன்', 'திட்டம்’, ‘தமிழரசு’ முதலிய இதழ்களில் வெளிவந்தவை.

குழந்தை உலகுக்குப் பலவகையிலும் சிறப்பாகப் பணிபுரிந்து வருபவரும், சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவைத் தலைவரும், மாணவர் மன்றச் செயலாளரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமாகிய புலவர், கவிஞர் தணிகை.உலகநாதன் அவர்கள் இப்புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றி.

நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றிக் குழந்தைக் கவிஞர் எழுதிய ‘பாட்டிலே காந்தி கதை’ என்ற நூல் இந்திய அரசின் பரிசையும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. காந்தி மகானின் வாரிசாக விளங்கிய நேருஜியைப் பற்றிய இந்த நூல் இப்போது இரண்டாம் பதிப்பாக வெளி வருகிறது * .


சென்னை

பதிப்பகத்தார்

30-7-87