பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காக்கை, எலியை முதுகிலே தூக்கிக்கொண்டு பறந்தது. இரண்டும் மான் இருந்த இடத்திற்குச் சென்றன. ஆமையும் பின்னாலே சென்றது. மான் என்ன ஆனதோ? என்ற கவலை ஆமைக்கு. நகர்ந்து, நகர்ந்து மான் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

காக்கை மேலே பறந்துபோய் வேடன் வருகிறானா என்று பார்த்தது. வேடன் கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்தான். உடனே, “அதோ வேடன் வருகிறான். சீக்கிரம் வேலை நடக்கட்டும்” என்றது காக்கை.

எலி வலையைப் பல்லால் கடித்தது. வலை அறுந்தது. மான் தப்பித்துக்கொண்டது.

வேடன் வருவதற்குள் மான் ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. வேடன் ஏமாந்துபோனன்!