பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

25



Headings — தலைப்பெயர்

ஞானாமிர்தம் என்னுந் திருநாமம் புனைந்து தமிழ்ச்சுவையும் சொன்னோக்கமும் பொருணோக்கமும் பொலிந்து நான்கு பக்கமுடையதாய் மாதம் இருமுறை பிரசுரஞ் செய்யப்படும் ஓர் பத்திரிகையை நமது பார்வைக்கனுப்பிய பத்திராதிபரவர்கட்கு விஞ்ஞாபன மோச்சுகின்றனம். இது ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் சபாபதி நாவலரவர்களை ஆசிரியராகப் பெற்றது. இதில் சாதாரணப் பிரகரணம், வைதிக சித்தாந்தப் பிரகரணம், பரமதப் பிரகரணம், தமிழ் இலக்கிய இலக்கணப் பிரகரணம், சமாசாரப் பிரகரணம் கடிதம் முதலிய தலைப்பெயர்கள் வாய்க்கப் பெற்றிருக்கிறது.

மேற்படி இதழ் , (1-6-1888) புத்தகம் - 2, இல, 11, பக். - 82

தலையங்கம் - தலைப்பெயர்

1889௵ ஆகஸ்டு - ௴ 24 உ பிரசுரமாகிய மஹாவிகட தூதன் பத்திரிகையில் 'அரக்கோணம் சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவு' எனத் தலைப்பெயரிட்டெழுதிய 'க-ஷ-கி என்பவரது தோழன்' எனப் பெயர் பூண்டவர் பதினெண் புராணங்களின் கருத்தையும் நோக்காது, முன்னிருந்த அருந்தமிழ்ப் புலவர் கருத்தையும் நோக்காது, சான்றோராகிய க்ஷத்திரியர்களால் வெளியிடப்பட்ட நூற்களின் கருத்தையும் நோக்கது சாஸ்திர சம்மதமின்றி, ’சான்றார்’ என்னும் பெயர் சாதிப் பெயரல்லவென்றும், சில நூற்களிற் சான்றார் என்னும் பெயர் அரசருக்கு வழங்கிடினும் அதைப்பற்றி எனக்கு அவசியமில்லை என்றும், சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணத்தின்கண் வருகின்ற ’ஈழக்குலச் சான்றார்’ என்பதற்கு ’கள்வாணிபகுலவறிஞர்’ எனப் பொருளாகுமென்றும், சில நூற்களில் அரசருக்கு கிராமணி என்னும் பட்டப்பெயர் வழங்கிடினும் அது ராஜகுல முற்றிலும் வழங்கவில்லை என்றும், சேக்கிழார் பெரிய புராணத்திற்கு நம்பியாண்டார் நம்பி தருவந்தாதிதான் முதனூலென்றும், வடநாட்டரசர் தென்னாட்டிற்கு வந்ததில்லை என்றும் இதுபோல இன்னுஞ் சில மொழிகளையும் தாறுமாறாகப் புரட்டி மூட தாற்பரியஞ் செய்து எழுதியிருக்கின்றார்.

நூல் : சான்றார் என்னுஞ்சொல் வழக்கின் முடிவைத் தகிக்குஞ் சண்டபானு (1891) பக்கம் - 1
நூலாசிரியர் : ஷண்முக கிராமணியார் (க்ஷத்திரிய வித்வான் நிவேதன சங்கத் தலைவர்)