பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

உவமைக்கவிஞர் சுரதா


சைக்கிள் ஷாப் - மிதிவண்டி நிலையம்
பிரஸ் - அச்சகம்
சலூன் - முடி திருத்தும் நிலையம்
ஜவுளிக்கடை - துணிக்கடை
மளிகைக்கடை - பலசரக்குக் கடை
ஜெனரல் ஸ்ஸோர்ஸ் - பல பொருள் நிலையம்
போட்டோ ஸ்டுடியோ - நிழற்பட நிலையம்
ரெஸ்டாரண்ட் காபி கிளப் டீ ஸ்டால் - சிற்றுண்டிச் சாலை
ஹோட்டல் - உணவு விடுதி
லாண்டரி - வண்ணப் பணிமனை
டைலரிங் மார்ட் - தையற்கடை
ஐஸ் கூலிங் - சுவைநீர் நிலையம்
மருந்து ஷாப் - மருத்துக் கடை


இங்ஙணம்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்
இண்டர்வியூ - நேர்காணல்

வினா - விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்

பாபநாசம் குறள்பித்தன்
நூல் : முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், டிசம்பர் 1992
கவிராத்திரி - பாடல் இரவு

தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திர பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.

இதழ் : முத்தமிழ் முரசு, 21.12.92
ஆசிரியர் : மு. சுப. கருப்பையா, தஞ்சை