பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

157


நூல் : தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கங்கள் - 7, 8
நூலாசிரியர் : வி. கே. சேஷாத்திரி, பி.ஏ., எல்.டி.,
(சென்னை கல்வி இலாகா)
Degree – மாத்திரை

வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி மாதங்களில் இந்த ஜில்லாவிலுள்ள மற்றப் பாகங்கள் காற்றும் மழையுமின்றி வருந்தும் போது இங்கே இந்த நல்ல காற்றும் இளமழையுங் கிடைக்கின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிடினும் இக்காலக் கருமேகங்களினூடே பச்சை மரங்கள் கொடிகள் முகந்து வீசுகினற காற்றானது சூரிய வெப்பத்தை 15 மாத்திரை (Degree) வரை குறைத்து மனதுக்கு ரம்மியமானதும் உடலுக்கு உகந்ததாகவுமுள்ள ஒரு அரிய சீதோஷ்ண நிலையைக் கொடுக்கின்றது.

நூல் : திருக்குற்றாலத் தல வரலாறு (1943), பக்கங்கள் : 9, 10
நூலாசிரியர் : ஏ. சி. ஷண்முக நயினார் பிள்ளை, பி.ஏ., பி.எல்.
(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தர்மகர்த்தர்)
Beauty Spot - அழகின் உறைவிடம்

ஐரோப்பியர்களே முதன் முதல் உடல்நலங் காரணமாக இங்கு வந்ததால் தங்கள் பெல்ஜிய நாட்டிலுள்ள ஸ்பா என்னும் ஆரோக்ய ஸ்தலம் போன்று நீர்வளம் நிரம்பி உடல் நலம் கொடுக்கும் தலமென்று இவ்வூரை வியந்து தென்னாட்டு ஸ்பா என்ற புனை பெயரிட்டனர்.

(Famous Spa of the South) இயற்கை அழகைக் கண்டு மகிழ்ந்து அழகின் உறைவிடம் (Beauty Spot) என்றும் புகழ்ந்தனர்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் - 13
Radio – ஒலிபரப்பி

சில வருடங்களுக்கு முன் இவ்வூரில் நகர பரிபாலன சபை (பஞ்சாயத்து) நிறுவப்பட்டு இப்போது திருவாளர் இலஞ்சி மிட்டாதார் I. K. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பி.ஏ., தலைமையில் பொதுமக்களின் சுகாதார நன்மைகளைப் பற்பல விதங்களில் கவனித்து வருகின்றது. பொதுமக்கள் நன்மைக்காக ஒரு